உள்நாடுபிராந்தியம்

நீரில் மூழ்கி ஒருவர் பலி – அம்பாறையில் சோகம்

அம்பாறையில் பண்டாரதுவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நவகிரியாவ வாவியில் நீராடிக்கொண்டிருந்த ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பண்டாரதுவ பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (07) மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் மாபலகம பகுதியைச் சேர்ந்த 50 வயதுடையவர் ஆவார்.

இவர் நண்பர்களுடன் இணைந்து நவகிரியாவ வாவியில் நீராடிக்கொண்டிருந்த போது திடீரென நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பண்டாரதுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

நாடு முழுவதும் இன்று சீரான வானிலை

கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை உயர்வு

இன்று மாலை ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையே சந்திப்பு