உள்நாடுபிராந்தியம்

நீராடச்சென்ற மூன்று சிறுவர்கள் நீரில் மூழ்கி பலி – மட்டக்களப்பு, வாகரையில் சோகம்

மட்டக்களப்பு, வாகரை, கருவப்பங்கேணி பகுதியில் குளத்திற்கு நீராடச்சென்ற மூன்று சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக வாகரை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் இன்று (06) பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.

மரணமடைந்த மூவரில் இரண்டு சிறுமிகளும் உள்ளடங்குவதாக வாகரை பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த மூவரும் 10 மற்றும் 11 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்ததோடு, மூவரின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் வாகரை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜி.பி.எச். சில்வா தலைமையில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

Related posts

ரணில் விக்கிரமசிங்க வியாழக்கிழமை விசேட உரை

editor

வவுனியா சம்பவம்: இளம் பெண்ணின் கணவரும் பலி!

இந்தியர்கள் 153 பேர் புதுடெல்லி நோக்கி