சூடான செய்திகள் 1

நீராடச் சென்ற இளைஞன் நீரில் மூழ்கி மாயம்

(UTV|COLOMBO) நீர்கொழும்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஏத்துக்கால கடற்பகுதியில் நீராடிக் கொண்டிருந்த இரு இளைஞர்களில் ஒருவர் காணாமற்போயுள்ளார்.

உடுகம்பொல பகுதியைச் சேர்ந்த 18 வயதுடைய நிமேஷ் ரணவீர எனும் இளைஞரே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.

காணாமல் போன இளைஞரை நீர்கொழும்பு  பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் ஒன்றிணைந்து தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சம்பவம் தொடர்பில் நீர்கொழும்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

தொடரும் சுங்க அதிகாரிகளின் தொழிற்சங்க போராட்டம்

கலாநிதி பட்டம் விவகாரம் – தொடரும் சி.ஐ.டியின் விசாரணை

editor

பிரபல பாடகர் சிரில் பெரேரா காலமானார்