உள்நாடுபிராந்தியம்

நீராட சென்ற ஒருவர் நீரில் மூழ்கி மாயம் – தேடும் பணி தீவிரம்

பெம்முல்ல, எல்லேஓயா மீகஹமுல்ல பகுதிக்கு நீராடச் சென்ற நபர் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.

இவ்வாறு காணாமல் போனவர் வெள்ளம்பிட்டி பகுதியைச் சேர்ந்த 54 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குறித்த நபர் நேற்று (18) தமது மனைவியுடன் உறவினர் ஒருவரின் வீட்டிற்குச் சென்றுள்ளார்.

அங்கிருந்து குறித்த பகுதியில் நீராட சென்ற போதே, அவர் நீரில் மூழ்கி காணாமல் போனதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

காணாமல் போனவரைத் தேடும் பணியில் பொலிஸார் மற்றும் கடற்படையின் சுழியோடிகள் ஈடுபட்டுள்ளனர்.

Related posts

வவுனியாவில் பாலியல் வன்புணர்வு அதிகரிப்பு

ஜானகி சிறிவர்தனவுக்கு விளக்கமறியல்

மேலும் ஒரு தொகை தடுப்பூசிகளை கொள்வனவு செய்ய அமைச்சரவை அனுமதி