அரசியல்உள்நாடுவீடியோ

வீடியோ | கோட்டை நீதிமன்றத்தில் முன்னாள் ஜனாதிபதி ரணில் ஆஜரானார்

பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் ஆஜராவதற்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சில சற்றுமுன்னர் கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு பிரவேசித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தமது பதவிக் காலத்தில் தமது மனைவி பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்கவின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக அரசாங்க நிதியைப் பயன்படுத்தி லண்டனுக்குச் சென்றமை தொடர்பில் குற்றம்சாட்டப்பட்டிருந்தது.

இதற்கமைய கடந்த ஓகஸ்ட் மாதம் 22 ஆம் திகதி ரணில் ரணில் விக்ரமசிங்க குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகிய நிலையில் கைது செய்யப்பட்டு பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

அதனையடுத்து அவரது உடல்நிலை குறைவு காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அதன் பின்னர் கடந்த ஓகஸ்ட மாதம் 26 ஆம் திகதி ரணில் விக்ரமசிங்க பிணையில் விடுவிக்கப்பட்டு வழக்கு இன்று வரை ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

வீடியோ

Related posts

மீண்டும் அதிகரித்தது லிட்ரோ எரிவாயின் விலை 

நாடு திரும்பினார் ரணில்

வெள்ளவத்தையில் நடந்த சம்பவம்: தமிழ் இளைஞன் பலி