வகைப்படுத்தப்படாத

நிவாரணப் பொருட்களுடன் வருகை தந்த சீன கப்பல்கள் நாடு திரும்பின

(UDHAYAM, COLOMBO) – வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப்பணிகளுக்கு உதவியளிக்கும் வகையில் நிவாரணப் பொருட்களுடன் இலங்கைக்கு வருகை தந்த சீனக்கப்பல்கள் நாடு திரும்பின.

கடந்தமாதம் 31ம் திகதி வருகை தந்த சீன இராணுவ கடற்படைக்குச் சொந்தமான ‘Chang Chun”, “Jing Zhou” மற்றும் “Chao Hu ஆகிய கப்பல்கள் நேற்று முன்தினம் நாடு திரும்பின.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவ வசதிகளை வழங்குவதற்காக 10 சிறிய படகுகள் மற்றும் ஐந்து மருத்துவ குழுக்களுடன் குறித்த கப்பல்களில் வருகை தந்த சீன கடற்படையினர் இலங்கை கடற்படையினருடன் இணைந்து நிவாரண மற்றும் மருத்துவ நடவடிக்கைகளில் ஈடுட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ஜனாதிபதி நாளை ரஷ்யா விஜயம்

Kim Kardashian West drops Kimono brand name

හම්බන්තොට නගරයේදී පුද්ගලයෙක් ඝාතනය කෙරේ