வகைப்படுத்தப்படாத

நிவாரண பொருட்களுடன் இலங்கை வரவுள்ள 3வது இந்திய கப்பல்!

(UDHAYAM, COLOMBO) – இலங்கையில் ஏற்பட்டுள்ள இயற்கை அனர்த்த நடவடிக்கைகளுக்காக நிவாரண பொருட்களுடன் 3வது இந்திய கடற்படை ஜலஷ்வா(Jalashva) கப்பல் இன்று இலங்கை வரவுள்ளது.

முன்னதாக நிவாரண பொருட்களுடன் 2வது இந்திய கடற்படை கப்பல் நேற்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.

இந்திய கப்பலில் கொண்டுவரப்பட்ட அனர்த்த நிவாரணப் பொருட்களுடன் இலகு வகை படகுகளும் கொண்டுவரப்பட்டன.

முதலாவது நிவாரணப் பொருட்களுடனான கடற்படை கப்பல் நேற்று முன்தினம் கொழும்பை வந்தடைந்தது.

இதில் 125 மீட்புப் பணியாளர்களும் வருகை தந்துள்ளனர்.

இவர்கள் இலங்கை மீட்புப் பணியாளர்களுடன் இணைந்து பணியாற்றுகின்றனர்.

இந்திய கடற்படையின் சுழியோடிகள் மற்றும் நடமாடும் மருத்துவ குழுவினரும் வருகை தந்துள்ளனர்.

வெள்ளத்தினால் அதிகம் பாதிப்படைந்த பிரதேசங்களில் இலங்கை மீட்புப் பணியாளர்களுடன் இணைந்து இவர்கள் தற்போது செயற்பட்டுவருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இந்தியாவின் நிவாரண பொருட்களுடனான மூன்றாவது கடற்படை ஜலஷ்வா(Jalashva) கப்பல் நாளை கொழும்பு துறைமுகத்தை வந்தடையும் என கடற்படை பேச்சாளர் சந்திம வலாகுளுகே தெரிவித்துள்ளார்.

Related posts

US launches inquiry into French plan to tax tech giants

මෝදර මහවත්ත ප්‍රදේශයේ භූ ගත ඉන්ධන නළ එලීම අද සිට

නිදහස්, සාමකාමී රටක් වෙනුවෙන් සියලු ජනතාව අතර භාෂා දැනුම ප්‍රවර්ධනය විය යුතුයි – ජනපති