வகைப்படுத்தப்படாத

நிலைபேறான அபிவிருத்திக்கு பொறிமுறை

(UDHAYAM, COLOMBO) – நிலைபேறான அபிவிருத்திக்கு பொறிமுறையொன்றை ஏற்படுத்தும் நோக்கில் நிலைபேறான அபிவிருத்தி சட்டமூலமொன்று கொண்டு வரப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கை நிலைபேறான அபிவிருத்தி சட்டமூலத்திற்கான பிரேரணையை பிரதமர் பாராளுமன்றத்தில் நேற்று சமர்ப்பித்தார்.

பிரதமர் இது தொடர்பாக உரையாற்றுகையில் ,

நிலைபேறான அபிவிருத்தியை நடைமுறைப்படுத்துவதற்கு சரியான பொறிமுறையொன்று அவசியமாகும். இது நீண்டகாலத்தைக் கொண்ட வேலைத்திட்டமாக அமைந்திருக்க வேண்டுமென்று குறிப்பிட்டார்.

இந்தச் சட்டத்தின் மூலம் 15 வருட காலத்திற்கான திட்டம் சமர்ப்பிக்கப்படும். கனடாவின் நிலைபேறான அபிவிருத்தி சபை சட்டமூலத்திற்கு அமைவாக இது தயாரிக்கப்பட்டிருப்பதாகவும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.

இந்த விவாதத்தில் கலந்து கொண்டு தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் நிரோஷன் பெரேரா உரையாற்றுகையில், 2030ம் ஆண்டை இலக்காகக் கொண்ட திட்டத்திற்கு அமைய நாட்டை அபிவிருத்தி செய்வதே அரசாங்கத்தின் நோக்கமாகும் என்று குறிப்பிட்டார்.

இந்த சட்டத்திற்கு அமைவாக 15 உறுப்பினர்களைக் கொண்ட நிலைபேறான அபிவிருத்திச் சபையொன்றும் அமைக்கப்படும் என்று தெரிவித்தார்.

சுற்றாடல் ,சமூகம் மற்றும் கலாசாரத்திற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்ல முடியுமென்றும் இராஜாங்க அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

விவாதத்தில் கலந்து கொண்ட நகரத்திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் இராஜாங்க அமைச்சர் திருமதி சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே உரையாற்றுகையில், இந்த சட்டத்தில் மகளிர் மற்றும் சிறுவர்கள் ஊக்குவிக்கப்படுவார்கள் என்று குறிப்பிட்டார். நிலைபேறான அபிவிருத்தி குறித்து சமூகத்திற்கு தெளிவுபடுத்துவதன் தேவையை இராஜாங்க அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

 

Related posts

மாலத்தீவில் அவசரநிலை பிரகடனம் – 139 பேர் கைது

தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் 50 பேர் பலி

Ginigathhena landslide Tragedy: Body of missing shop owner recovered