உள்நாடுபிராந்தியம்

நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பஸ்ஸில் தீ விபத்து

நல்லூர் ஆலயத்திற்கு சுற்றுலா வந்தவர்களின் பஸ் திடீரென தீப்பற்றி எரிந்தமையால், சிறிது நேரம் அவ்விடத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

தென்னிலங்கையில் இருந்து பஸ்ஸில் யாழ்ப்பாணத்திற்கு சுற்றுலா வந்தவர்கள், நல்லூர் முத்திரை சந்தி பகுதியில், பஸ்ஸை நிறுத்தி விட்டு, நல்லூர் ஆலயத்திற்கு சென்றுள்ளனர்.

சாரதி பஸ்ஸில் இருந்த நிலையில் , திடீரென பஸ் தீப்பற்றியுள்ளது.

விரைந்து செயற்பட்ட சாரதி தீயினை அணைக்க முற்பட்ட வேளை அது பயனளிக்காத நிலையில், அவ்விடத்தில் நின்றவர்கள், யாழ் . மாநகர சபையின் தீயணைப்பு படையினருக்கு தகவல் வழங்கியதை அடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு படையினர் பேருந்தில் ஏற்பட்ட தீயினை அணைத்தனர்.

தீயணைப்பு படையினரின் விரைவான செயற்பாட்டினால் , பஸ்ஸினுள் தீ பெருமளவுக்கு பரவாமல் அணைக்கப்பட்டது.

Related posts

மத்திய கிழக்கு, சீன மற்றும் இந்திய இராஜதந்திரிகள் ஜனாதிபதியை சந்தித்தனர்

கடும் சிரமத்திரகு மத்தியில் உணவகங்கள், பேக்கரிகள்

பொத்துவில் அறுகம்பேயில் போயா தினத்தில் மதுபான விற்பனையில் ஈடுபட்ட நபர் கைது

editor