உள்நாடுபிராந்தியம்

நிர்வாணமாக சைக்கிளில் சென்ற நபர் – இலங்கையில் சம்பவம்

கந்தானை நகரில் நிர்வாண கோலத்தில் சைக்கிளில் நபரொருவர் சென்ற சம்பவம் வாகனம் ஒன்றின் முன்பக்க கமராவில் பதிவாகியுள்ளது.

இந்த காட்சி சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

அதில் நபரொருவர் அமைதியாக சைக்கிளை மிதித்து, சைக்கிளின் கைப்பிடியின் இருபுறமும் தனது ஆடைகளைப் பிடித்துக் கொண்டு செல்லும் காட்சி பதிவாகியுள்ளது.

பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் பிரதேச மக்கள் மற்றும் அதிகாரிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.

அந்த நபரை அடையாளம் காணவும், ஏதேனும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமா என்பதைத் தீர்மானிக்கவும் பொலிஸார் தற்போது காட்சிகளை பரிசீலனை செய்து வருகின்றனர்.

Related posts

களுத்துறை நகர சபை தலைவர் கைது

மாணவர்களை குழுக்களாக பிரித்து கல்வி நடவடிக்கைகளை முன்னெடுக்க நடவடிக்கை

ஊடகவியலாளர் எக்னெலிகொட வழக்கு : 9 இராணுவ புலனாய்வு அதிகாரிகளின் பிணை இடைநிறுத்தம்