சூடான செய்திகள் 1

நியூஸிலாந்து பள்ளிவாசல் தாக்குதல் : 200 பேருக்கு இலவச ஹஜ் யாத்திரை வாய்ப்பு

(UTVNEWS | COLOMBO) -நியூஸிலாந்தின் கிறைஸ்ட்சேர்ச் பிராந்திய பள்ளிவாசல்களில் இடம் பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் சிக்கி உயிர்தப்பியவர்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் உறவினர்களை உள்ளடக்கிய 200 பேருக்கு சவூதி அரேபிய மன்னர் சல்மான் இம் முறை நடைபெறவுள்ள ஹஜ் யாத்திரையில் பங்கேற்க அழைப்பு விடுத்துள்ளார்.

தேவையான அனைத்து வசதிகளையும் மன்னர் வழங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கடந்த மார்ச் 15 ஆம் திகதி கிறைஸ்ட்சேர்ச் பிராந்தியத்திலுள்ள இரு பள்ளிவாசல்களில் அவுஸ்திரேலிய வெள்ளையின துப்பாக்கிதாரியால் நடத்தப்பட்ட தாக்குதல்களில் 51 பேர் உயிரிழந்திருந்தனர்.

Related posts

தேசிய வெசாக் வாரம் இன்று ஆரம்பம்

களுத்துறை ரைகம,கைத்தொழில் மற்றும் தொழில்நுட்ப அபிவிருத்தி வலயம் ஒன்றை அமைக்க அமைச்சரவை அனுமதி

வென்னப்புவ பகுதியில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு இருவர் கொலை