அரசியல்உள்நாடுபிராந்தியம்

நிந்ததவூர் தவிசாளர் தெரிவில் சதி – உப தவிசாளர் இர்பானுக்கு விளக்கம் கோரி கடிதம்!

நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் தெரிவினை மேற்கொள்ளும் அமர்வுக்கு முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் தேசிய மக்கள் சக்தி கட்சியுடன் (NPP) இணைந்து பகிஷ்கரிப்பில் ஈடுபட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) நிந்தவூர் பிரதேச சபையின் உப தவிசாளர் இர்பானுக்கு விளக்கம் கோரி கட்சியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கடந்த உள்ளூராட்சிமன்ற தேர்தலின் போது, நிந்தவூர் பிரதேச சபையில் 06 ஆசனங்களை பெற்றுக்கொண்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸுக்கு தவிசாளர் பதவியும், 01 உறுப்பினரைக்கொண்ட ஐக்கிய மக்கள் சக்திக்கு உப தவிசாளர் பதவியும் என்ற அடிப்படையில் ஆட்சியை கைப்பற்றுவதற்கு மேற்கொள்ளப்பட்ட உடன்பாட்டை மீறி ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் (SJB) உறுப்பினர் இர்பான் நடந்துகொண்ட விதம் தொடர்பிலும், இம்முறைய தவிசாளர் தெரிவின் போது முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்களுடன் இணைந்து அமர்வுக்கு கலந்துகொள்ளாமை தொடர்பிலும் விளக்கம் கோரி ஐக்கிய மக்கள் சக்தியின்(SJB) செயலாளர் கடிதமொன்றை இர்பானுக்கு அனுப்பிவைத்துள்ளார்.

கடந்தமுறை இடம்பெற்ற உப தவிசாளர் தெரிவின் போது அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் உறுப்பினர்களின் ஆதரவுடன் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டு உப தவிசாளர் பதவியை பெற்றுகொண்ட இர்பான், மக்கள் காங்கிரஸின் உறுப்பினரை தவிசாளராக்கும் நடவடிக்கைக்கு, கட்சியின் தீர்மானத்திற்கு எதிராக செயற்பட்டு வருவதாகவும் தெரியவருகின்றது.

கடந்த முறை அதிக ஆசனங்களைக்கொண்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் உறுப்பினர் ஒருவரை முஸ்லிம் காங்கிரஸ் கட்சி தன்னகப்படுத்தி அவரை தவிசாளராக்கிக்கொண்ட சதிக்கு பின்னால் இர்பான் செயற்பட்டதாகவும் தெரியவருகின்றது.

இவ்வாறன தொடர் சதி முயற்சிக்கும் விளக்கம் கோரியே அவருக்கு கடிதம் அனுப்பட்டுள்ளதாகவும் அக்கட்சியின் முக்கியஸ்தர் ஒருவர் எமக்கு தெரிவித்தார்.

நிந்தவூரின், கல்விமான் மூத்த சட்டத்தரணி ரியாஸ் ஆதமுக்கு தவிசாளர் பதவியை வழங்குவதற்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி முடிவெடுத்திருந்த போதிலும், றியாஸ் ஆதமுக்கு தவிசாளர் பதவி கிடைக்கக்கூடாது என்ற நிலைப்பாட்டில் செயற்பட்டுவரும் முஸ்லிம் காங்கிரஸின் தொடர் சதியில் இர்பானும் இணைந்து செயற்பட்டு வருவதாக தெரியவருகின்றது.

மேலும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி அதிகமான ஆசனங்களைப்பெற்ற பொத்துவில் மற்றும் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் ஆட்சிக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி முழுமையாக ஆதரவுகளை வழங்கியிருந்த நிலையில் ஓட்டமாவடி மற்றும் நிந்தவூர் பிரதேச சபைகளில் அதிக ஆசனங்களைப்பெற்ற அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைப்பதற்கு எதிராக தொடர்ந்தும் முஸ்லிம் காங்கிரஸ் பின்வழி முயற்சியில் ஈடுபட்டுவருவதுடன், இதற்கு உடந்தையாக ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) ஒரே ஒரு உறுப்பினர் செயற்பட்டுவருவதும் குறிப்பிடத்தக்கது.

Related posts

பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயத்தினால் இலங்கை உயர்தர மாணவர்களுக்கு ஜின்னா புலமைப்பரிசில் வழங்கி வைப்பு

மேலும் 47 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

முன்னாள் ஜனாதிபதி ரணில் இந்தியா செல்கிறார்

editor