சூடான செய்திகள் 1

நாளையும் CID யிற்கு நாமல் ராஜபக்ஷ அழைப்பு

(UTV|COLOMBO)-ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ ஆகியோரை படுகொலை செய்வதற்கான சதி தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள இந்திய பிரஜை வழங்கிய வாக்குமூலங்கள் குறித்து விசாரணை செய்வதற்காக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தன்னை நாளை(23) குறித்த திணைக்களத்திற்கு அழைத்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர்
நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இந்திய பிரஜை தெரிவித்த விடயங்கள் தொடர்பில் நாமல் ராஜபக்ச விமல்வீரவன்சவின் மனைவி ஆகியோரை விசாரணை செய்வதற்காக குற்றப்புலனாய்வு பிரிவினர் நீதிமன்றத்தின் அனுமதியை பெற்றுள்ளனர்.

ஜனாதிபதி கொலை சதி முயற்சி தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ள இந்திய பிரஜை தான் நாமல் ராஜபக்சவுடன் தொடர்பு வைத்திருந்ததாகவும் விமல் வீரவன்சவின் வீட்டிற்கு சென்றிருந்ததாகவும் தெரிவித்துள்ளார் என தகவல்கள் வெளியாகியமையும் குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

Related posts

ஒரு கோடி ரூபாய் பெறுமதியான மின்சாதனங்கள் அழிவு

இன்று நண்பகல் 12.00 மணி ஊரடங்குச் சட்டம் நீடிப்பு

editor

இலங்கையில் தயாரிக்கப்பட்ட முதலாவது செய்மதி…