உள்நாடுகாலநிலை

நாளையிலிருந்து மழை அதிகரிக்கக் கூடிய சாத்தியம்

வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா, தென் மற்றும் மத்திய மாகாணங்களில் நாளையிலிருந்து (28ஆம் திகதி) அடுத்த சில நாட்களில் மழை நிலைமை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும் அம்பாறை, மட்டக்களப்பு மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டின் தென்மேற்குப் பகுதியில் மேக மூட்டமான வானம் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.

மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

Related posts

பல அரச நிறுவனங்கள் பணம் இல்லாமல் ஸ்தம்பிதம்?

வன்னியில் ரிஷாதை பழி வாங்குகிறீர்களா ? மக்களை பழி வாங்குகிறீர்களா…? முகா உயர்பீடக் கூட்டத்தில் ஹூனைஸ் பாரூக் காரசாரம்!

editor

நாட்டினுள் ஊழல் எதிர்ப்பு பொறிமுறைகளை வலுப்படுத்த ஜப்பான் நிதியுதவி

editor