உள்நாடு

நாளை முதல் பேரூந்து சேவை ஆரம்பம்

(UTV|கொழும்பு)- கொழும்பு மற்றும் கம்பஹா தவிர்ந்த ஏனைய பகுதிகளில் மாகாணங்களுக்கு இடையிலான பேரூந்து போக்குவரத்து சேவை நாளை(26) முதல் ஆரம்பிக்கவுள்ளதாக பயணிகள் போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சு தெரிவித்துள்ளது.

பேரூந்து போக்குவரத்து சேவைகள் நாளை அதிகாலை 4.30 மணி முதல் பிற்பகல் 6 மணி வரை இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சுகாதார பிரிவினால் வழங்கப்பட்டுள்ள ஆலோசனைகளுக்கு அமைய அனைத்து பயணிகளும் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ஹோமாகம பகுதியில் ஒரு தொகை வெடிபொருட்கள் மீட்பு

முஸ்லிம் பெண்கள் காப்பகத்தினால் மாவட்ட செயலாளருக்கு வழங்கப்பட்ட கெளரவம்!

ரிஷாட் பதியுதீன் சற்றுமுன்னர் பாராளுமன்றுக்கு