உலகம்உள்நாடு

நாளை முதல் இலங்கையர்களுக்கு சிங்கப்பூரும் தடை

(UTV |  சிங்கப்பூர்) – இலங்கை உள்ளிட்ட சில நாடுகளில் இருந்து சிங்கப்பூருக்கு வருகைத் தருவதற்கு அந்நாட்டு அரசாங்கம் தற்காலிகமாக தடை விதித்துள்ளது.

அதன்படி இலங்கை, பங்களாதேஷ், நேபாளம், பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து வருகைத்தரும் பயணிகளுக்கே இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை உயர்ஸ்தானிகராலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சிங்கப்பூரில் உள்ள கொவிட் 19 தொடர்பான அமைச்சின் செயலணியால் குறித்த தடை விதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், குறித்த தீர்மானம் நாளை (02) தொடக்கம் அமுல்படுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

மீன் பிடி தொழிலுக்காக கடலுக்குச் சென்ற இரண்டு படகுகள் மாயம்.

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு குறித்து வௌியான தகவல் | வீடியோ

editor

ஜனாதிபதி வேண்டுகோள் விடுத்தால் ஊரடங்கு பிறப்பிக்கப்படும்

editor