உள்நாடுகாலநிலை

நாளை பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும்

நாளை (11) பிற்பகல் 2 மணிக்குப் பிறகு ஊவா மாகாணத்திலும், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

அத்துடன் மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இடியுடன் கூடிய மழையுடன் தற்காலிக பலத்த காற்று வீசுவதுடன், மின்னல் தாக்கங்களால் ஏற்படும் அனர்த்தங்களை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் அந்த திணைக்களம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.

அதேநேரத்தில், இன்றைய குறைந்தபட்ச வெப்பநிலை நுவரெலியாவில் பதிவாகியுள்ளதுடன், அது 12.7 டிகிரி செல்சியஸாக பதிவானது.

மன்னாரில் அதிகபட்ச வெப்பநிலையாக 27.2 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related posts

 srilankan airlines இன் 42 விமானிகள் இராஜினாமா

மக்கள் காங்கிரஸுக்கு வழங்கப்படும் ஆணை, சமூக விடிவுக்கு வித்திடும் – முன்னாள் அமைச்சர் ரிஷாட்

பாராளுமன்ற அமர்வு டிசம்பர் மாதம் 3 ஆம் திகதி வரை ஒத்திவைப்பு

editor