உள்நாடு

நாளை நீர்கொழும்பில் நீர் வெட்டு குறித்து வெளியான அறிவிப்பு

நீர்கொழும்பின் சில பகுதிகளில் நாளை (07) 12 மணிநேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

நாளை காலை 09.00 மணி முதல் இரவு 09.00 மணி வரை நீர் விநியோகம் இவ்வாறு இடைநிறுத்தப்படும் என அந்தச் சபை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

இதன்படி, பெரியமுல்ல, எத்துக்கால, குடாப்பாடுவ, தளுபொத்த, கட்டுவ, லெவிஸ் வீதி, செல்லக்கந்த வீதி மற்றும் வெல்ல வீதி ஆகிய பிரதேசங்களில் இந்த நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

நீர்கொழும்பு நீர் வழங்கல் திட்டத்தின் பெரியமுல்ல நீர் கோபுரத்தில் அவசர பராமரிப்புப் பணிகள் காரணமாக இந்த நீர் வெட்டை மேற்கொள்ள வேண்டியுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

Related posts

தமிழ், சிங்களப் புத்தாண்டு – அரசின் புதிய சட்டதிட்டங்கள்

வவுனியாவில் துயர் சம்பவம்: இல்ல விளையாட்டு போட்டியால் மரணித்த முஸ்லிம் பாடசாலை மாணவர்கள்

நாட்டை இயல்பு நிலைக்குக் கொண்டுவர வேண்டும் – ஜனாதிபதி அநுர

editor