உள்நாடுசூடான செய்திகள் 1

நாளாந்தம் ஒரு மணித்தியால மின்வெட்டு

(UTV|கொழும்பு)- இன்று முதல் 4 நாட்களுக்கு ஒரு மணித்தியாலத்திற்கு நாடளாவிய ரீதியில் மின்சார விநியோகம் துண்டிக்கப்படவுள்ளது.

நாடு முழுவதும் நான்கு வலயங்களாக பிரிக்கப்பட்டு இரண்டு கட்டங்களாக மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளர் கீர்த்தி கருணாரத்ன தெரிவித்தார்.

அதற்கமைய, முதல் வலயத்தில் மாலை 6 மணி தொடக்கம் 7 மணி வரை

இரண்டாவது வலயத்திற்கு இரவு 7 மணி தொடக்கம் 8 மணி வரை

மூன்றாவது வலயத்தில் இரவு 8 மணி தொடக்கம் 09 மணி வரையும்

நான்காவது வலயத்தில் இரவு 09 மணி தொடக்கம் 10 மணி வரையும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

நுரைச்சோலை மின் ஆலையில் மின் பிறப்பாக்க கட்டமைப்பில் மின்சார உற்பத்தி வழமைக்கு திரும்பும் வரை நான்கு நாட்களுக்கு மாத்திரம் மின்சார விநியோகத்தைத் துண்டிக்க தீர்மானித்துள்ளதாக இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளர் தெரிவித்தார்

Related posts

தடை செய்யப்பட்ட அமைப்புக்கு ஆதரவு வழங்கிய சந்தேக நபர் கைது

எதிர்வரும் மூன்று வாரங்கள் கடினமான காலமாக இருக்கும்

கலைக்கப்பட்டுள்ள பாராளுமன்றத்தை கூட்ட முடியாது