உள்நாடு

நாரஹேன்பிட்டி துப்பாக்கிச் சூட்டு சம்பவம் – மேலும் மூவர் கைது

தேசிய லொத்தர் சபையின் முன்னாள் நிர்வாக பணிப்பாளர் துசித ஹல்லோலுவவின் ஜீப் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவத்துடன் தொடர்புடைய மோட்டார் சைக்கிள் செலுத்துனர் மற்றும் சம்பவத்திற்கு உதவிய மேலும் இரண்டு சந்தேக நபர்கள் கொழும்பு மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சந்தேக நபர்கள் நேற்று (27) வத்தளை மற்றும் கிருலப்பனை பகுதிகளில் கைது செய்யப்பட்டதுடன், அவர்கள் வைத்திருந்த 04 கையடக்க தொலைபேசிளை கொழும்பு மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் கையகப்படுத்தியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 31, 32 மற்றும் 40 வயதான வத்தளை மற்றும் கொழும்பு 14 பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

சந்தேக நபர்கள் இன்று (28) கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

நாரஹேன்பிட்டி பொலிஸார் மற்றும் கொழும்பு மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Related posts

கைது செய்யப்பட்ட உப பொலிஸ் பரிசோதகர் பணி நீக்கம்

கல்முனையில் எதிர்காலத்தை நோக்கி – மாணவர் ஆராய்ச்சியாளர் செயற்றிட்டம் முன்னெடுப்பு.

முன்னாள் அமைச்சர் கெஹெலிய உள்ளிட்ட 12 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

editor