உள்நாடுபிராந்தியம்

நாரம்மல பகுதியில் விபத்தில் சிக்கிய லொறி – இருவர் பலி

நாரம்மல, அலஹிடியாவ பகுதியில் இன்று (12) இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்தனர்.

லொறி ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து தொலைபேசி கம்பத்தில் மோதி கவிழ்ந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

லொறியின் பின்புறத்தில் பயணித்த இருவர் அதில் நசுங்கி காயமடைந்த நிலையில் நாரம்மல வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தனர்.

உயிரிழந்தவர்கள் வவுனியா மற்றும் நெடுங்கேணியைச் சேர்ந்த 26 மற்றும் 29 வயதுடைய இரு இளைஞர்கள் என தெரியவந்துள்ளது.

விபத்து தொடர்பில் லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதோடு, நாரம்மல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Related posts

50 இலட்சம் ரூபாய் ஐஸ் போதைப்பொருளுடன் மூவர் கைது

editor

பொதுச் செயலாளராக ரஞ்சித் மத்தும பண்டார நியமனம்

மன்னாரில் இறந்த நிலையில் கரை ஒதுங்கிய கடல் பசு!

editor