இலங்கையின் சுதந்திரப் போராட்ட காலத்திலும், சுதந்திரத்திற்குப் பின்னரும் நூற்றுக்கணக்கான படைத்துறை அதிகாரிகள் சாதனை புரிந்துள்ளனர், உயிரை இலங்கைகாக ஈர்ந்துள்ளனர்!
இலங்கை முஸ்லிம்களைப் பொருத்தவரையில் அரசியல் வியாதிகளுக்கும்,டாக்டர் ,என்ஜினியருக்கும் கொடுக்கும் கெளரவத்தையும், மதிப்பையும், மரியாதையையும் படைத் துறை அதிகாரிகளுக்கு இதுவரையிலும் வழங்கியது கிடையாது!
இலங்கையில் உள்ள சிங்கள மக்களும், தமிழ் மக்களும் தமது இனத்தில் உள்ள படைத்துறை அதிகாரிகளை கெளரப்படுத்தி, உயர்த்திப் பிடிக்கும் அளவிற்கு முஸ்லிம் சமூகம் கண்டு கொள்வதேயில்லை! ஒரு நாட்டின் அஸ்திபாரமே படைத்துறைதான், அந்தப் படைத்துறையில் முஸ்லிம்கள் இணைகின்ற விகிதம் மிக மிகக் குறைவாகும், அப்படியும் குறைவாக இணையும் சமூக வீரர்களையும் முஸ்லிம் சமூகம் கெளரவப்படுத்தி சமூக அந்தஸ்த்தை வழங்கியது கிடையாது!
முஸ்லிம் சமூகம் வியாபார சமூகமாக இருப்பதன் காரணமாக இலங்கையின் படைத்துறை பற்றியோ, படைத்துறையில் கடமையாற்றும் வீரர்களைப் பற்றியோ கவலைப்படுவதோ கிடையாது! ஒரு வியாபார சமூகத்தால் மட்டும் சமூகத்தை உயர்த்த முடியாது என்பதை சமூக நிறுவனங்கள் கவனத்தில் எடுத்து படைத்துறை அதிகாரிகளை மேம்படுத்த முன்வர வேண்டும்!
இலங்கையின் வரலாற்றில் பெரிய அந்தஸ்த்தை பெற்றுக் கொண்ட பல முஸ்லிம் அதிகாரிகளை தமது உயிரை ஸ்ரீலங்கா என்ற நாட்டுக்காக தியாகம் செய்த வீரர்களை முஸ்லிம் சமூகம் கெளரவப் படுத்த வேண்டும் என்பதற்காவே பாராட்டுகிறோம், விருது வழங்குகிறோம்!
ஒரு பலவீனமான சமூகம், தங்கள் சமூகத்தை அடையாளப்படுத்தும் படைத்துறை அதிகாரிகளை கெளரவப்படுத்துவதன் ஊடாகவே பலம் பெற முடியும் என்பதை முஸ்லிம் சமூக நிறுவனங்கள் கவனத்தில் எடுத்து எல்லா விழாக்களிலும் பிரதம விருந்தினர்களாக அழைத்து முஸ்லிம் சமூக இளைஞர் சந்ததிக்கு அறிமுகப்படுத்த வேண்டும் என்பதே ஆக்கபூர்வமான செயற்பாடாக அமையும்!
இலங்கைக்கு தமது உயிரை கொடையாகக் கொடுத்த வீரர்களின் ஞாபகார்த்தமாக நிகழ்வுகளையும், போட்டிகளையும் நடாத்தி இளம் சமுதாயம் படைத்துறையில் இணைந்து நாட்டிற்கு சேவை செய்ய வழிகாட்ட வேண்டும்!
-எக்ஸத் ஊடகப் பிரிவு
