அரசியல்உள்நாடு

நாமல் ராஜபக்ஷவின் கூட்டத்தின் மீது கல்வீச்சுத் தாக்குதல் – ஒருவர் காயம்

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்க்ஷவின் வெற்றியை உறுதிப்படுத்தும் நோக்கில் ஹம்பாந்தோட்டை சிறிபோபுர பிரதேசத்தில் நடைபெற்ற கூட்டம் மீது கற்கள் வீசப்பட்டுள்ளன.

கூட்டத்தில் கலந்து கொண்ட குழந்தை ஒன்று கல் தாக்குதலில் காயமடைந்து ஹம்பாந்தோட்டை மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஹம்பாந்தோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த பொதுக்கூட்டத்தில் நாமல் ராஜபக்க்ஷ, சமல் ராஜபக்க்ஷ, ஷிரந்தி ராஜபக்க்ஷ ஆகியோர் பங்கேற்கவிருந்தனர். கூட்ட அரங்கின் மீது சுமார் மூன்று கற்கள் வீசப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்

Related posts

ரோஷன் அபேசுந்தரவுக்கு பதவி உயர்வு

கொவிட்-19 தகவல் திரட்டும் புதிய செயலி அறிமுகம்

லிந்துலை நகர சபைத் தலைவர் பதவி நீக்கம்