அரசியல்உள்நாடு

நாமல் எம்.பி யின் சட்டமாணி பட்டம் – CID யின் விசாரணைகள் ஆரம்பம்!

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ நாமல் ராஜபக்ஷவின் சட்டமாணி பட்டத்தை பெற்றுக்கொள்வதற்கு முறைக்கேடான வகையில் பரீட்சைக்கு தோற்றினார் என்ற குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

இலங்கை சட்டக் கல்லூரியின் பரீட்சையின் போது நாமல் ராஜபக்ஷ மோசடியில் ஈடுபட்டதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் இருப்பதாகவும் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

இதனை கருத்தில் கொண்ட கொழும்பு நீதவான் தனுஜா லக்மாலி, இது தொடர்பான முன்னேற்ற அறிக்கையை விரைவில் நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

Related posts

IMF பிரதிநிதி குழு இன்று இலங்கைக்கு

‘இராணுவ ஆட்சிக்கு நாடு செல்கிறது’

இஷாரா செவ்வந்தி குறித்து போலி தகவல் வழங்கிய நபருக்கு விளக்கமறியல்

editor