விளையாட்டு

நான் மனிதனாக மாறியதற்கு காரணம் அவரே

(UTV|INDIA)-இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான டோனி பல சாதனைகள் படைத்துள்ளார். அதில் மிக முக்கியமானது அவர் வென்ற மூன்று ஐசிசி கோப்பைகள் ஆகும். இதுதவிர அவர் தனது பேட்டிங், விக்கெட் கீப்பிங் மற்றும் கேப்டன்ஷிப் திறமைகளால் பல சாதனைகள் புரிந்துள்ளார்.

சமீபத்தில் நடந்து முடிந்த ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கோப்பையை வென்றது. பரிசளிப்பு விழாவின் போது மற்ற வீரர்கள் வெற்றி கோப்பையுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். ஆனால் டோனி தனது மகள் ஜிவாவுடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டார்.
இந்நிலையில், ஒரு நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய டோனி கிரிக்கெட்டை வாழ்க்கையாக நினைத்து வாழ்ந்துகொண்டிருந்த தன்னை மகள் ஜிவா தான் மனிதனாக மாற்றினார் என கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-
என் மகள் ஜிவா என்னை மனிதானாக மாற்றியுள்ளார். ஜிவா பிறப்பதற்கு முன்னர் நான் பெரும்பாலான நாட்களை கிரிக்கெட் விளையாடுவதிலேயே கழித்து வந்தேன். வெளிநாடு சுற்றுப்பயணம் செல்லும் நிலை ஏற்படுவதால் குடும்பத்துடன் நேரத்தை செலவிடமுடியாமல் இருந்தேன். ஒரு மகள் எப்போதும் தன் தந்தையுடன் மிக நெருக்கமாக இருப்பது இயல்புதான். அதே போன்று தான் என் மகளும் உள்ளார்.
ஐபிஎல் போட்டி தொடர் முழுவதும் ஜிவா என்னுடன் இருந்தார். போட்டிக்கு முன்னும், பின்னும் மைதானத்தில் புல் தரையில் என்னுடன் விளையாட, மைதான பராமரிப்பாளர்களிடம் அனுமதி கோரினேன். மேலும் எங்கள் அணியில் நிறைய வீரர்கள் குழைந்தைகளுடன் வந்திருந்தனர். அவர்கள் ஒன்றாக விளையாடுவதைப் பார்க்க மிக மகிழ்ச்சியாக இருந்தது.
இவ்வாறு டோனி கூறியுள்ளார்.

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

21 சதங்களை கடந்த உலகின் 4ஆவது துடுப்பாட்ட வீரராக ரோஹித் சர்மா

நியூசி.டெஸ்ட் தொடரில் இருந்து ஆர்ச்சர் விலகல்

இலங்கை கிரிக்கெட் அணி இன்று இங்கிலாந்து பயணம்