தான் அரசாங்கத்தில் இருந்து விலகவில்லை என மேல் மாகாண ஆளுநர் ஹனீப் யூசூப் தெரிவித்துள்ளார்.
அவ்வாறு வெளியாகும் தகவல்கள் அடிப்படையற்றதும், பொய்யானதுமென அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் தமது X கணக்கில் கருத்து வெளியிட்டுள்ள அவர்,
ஜனாதிபதியின் இலக்குகளை அடைவதில் தமது அர்ப்பணிப்பு உறுதியானது எனவும், இதில் எவ்வித ஓய்வும், தயக்கமும் கிடையாது என குறிப்பிட்டுள்ள அவர், நாட்டை மீண்டும் கட்டியெழுப்பும் நோக்கத்தில் தாம் முழுமையான அர்ப்பணிப்புடன் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.