விளையாட்டு

நாணய சுழற்சியில் இலங்கைக்கு வெற்றி

(UTV | கொழும்பு) –  இலங்கை மற்றும் தென் ஆபிரிக்க அணிகளுக்கு எதிரான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் சர்வதேச போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்துள்ளது.

கொழும்பு ஆர். பிரேமதாஸ மைதானத்தில் இடம்பெறவுள்ள இப்போட்டி இன்று பிற்பகல் 2.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

இதேவேளை, இன்றைய போட்டியில் இலங்கை அணியில் மூன்று மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அதற்கமைய, பானுக்க ராஜபக்ஷ, மினொட் பானுக்க மற்றும் அகில தனஞ்ச ஆகியோர் இன்றைய போட்டியில் இடம்பெறவில்லை.

அவர்களுக்கு பதிலாக தினேஷ் சந்திமல், கமிந்து மெண்டிஸ் மற்றும் அறிமுக வீரர் மஹேஸ் தீக்ஷன ஆகியோர் உள்வாங்கப்பட்டுள்ளனர்.

Related posts

சுழற்பந்து வீச்சாளர் ரங்கன ஹேரத் காயமடைந்துள்ளார்

Kandy Warriors இனை தோற்கடித்த Jaffna Kings

நாணய சுழற்சியில் தென்னாபிரிக்கா வெற்றி