அரசியல்உள்நாடு

நாட்டை விட்டு வெளியேற திட்டமிட்டுள்ள 80 எம்.பிக்கள் – முஜிபுர் ரஹ்மான்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னர் 80 முக்கிய அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் நாட்டை விட்டு வெளியேறத் தயாராகி வருவதாக ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பேச்சாளர்களாக செயற்பட்ட அமைச்சர்கள் மற்றும் முக்கிய நபர்கள் நாட்டை விட்டு வெளியேற உள்ளதாக கூறிய அவர் ரணில் விக்கிரமசிங்கவின் உண்மைத் தன்மையை அவர்கள் உணர்ந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தாம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை இழந்துவிட்டதாகவும், ஜனாதிபதியுடன் தொடர முடியாது என்பதை உணர்ந்து, தற்போது குறுக்கு வழியில் நிற்கின்றார்கள் என்றும், தமது செயற்பாடுகளுக்காக வருந்துகின்ற சிலர் உணர்ந்துள்ளனர்.

இவர்களில் சுமார் 80 பேர் ஏற்கனவே விசாவைப் பெற்றுக் கொண்டுள்ளதாகத் தெரிவித்த அவர், ரணில் விக்கிரமசிங்கவின் பாதுகாவலர் இல்லை என்பது தங்களுக்குத் தெளிவாகத் தெரிந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்கவின் வெற்றிக்காக செயற்படுவதற்கு மாத்திரமே ஜனாதிபதி அவர்களைப் பயன்படுத்துகின்றார் என்பதையும் குழு உணர்ந்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ரஹ்மான் மேலும் தெரிவித்தார்.

Related posts

அரச ஊழியர்களுக்கு குறைந்த வட்டியில் வீட்டுக் கடன்கள் – அமைச்சர் வசந்த சமரசிங்க

editor

இரண்டாம் தவணைக்கான பாடசாலை விடுமுறை

ஜெரோம் பெனாண்டோவின் வெளிநாட்டு பயணத் தடை நீக்கம்

editor