உள்நாடு

நாட்டின் பொருளாதார நெருக்கடி : வெளிவந்தது மாநாயக்க தேரர்களின் கூட்டறிக்கை

(UTV | கொழும்பு) – நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை தொடர்பில் மாநாயக்க தேரர்கள் கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவு காரணமாக நாட்டின் ஒட்டுமொத்த மக்களும் இன்று எதிர்கொண்டுள்ள சிரமங்களினால் மகாசங்கத்தினர் மிகவும் கவலையடைவதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இத்தருணத்தில், மக்கள் மீதான பொருளாதார அழுத்தத்தை குறைக்கும் வகையில், அரசாங்கத்தின் அனைத்து தேவையற்ற செலவீனங்களையும் அகற்றி, மக்களின் நலனுக்காக தியாகம் செய்யுமாறு மகாநாயக்கர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

மேலும், தமது தனிப்பட்ட அரசியல் நிகழ்ச்சி நிரல்களை மறந்து இன, மத கட்சி பேதமின்றி தேசிய கொள்கையை வகுப்பதன் ஊடாக இந்த நெருக்கடிக்கு தீர்வுகாண ஒன்றிணைந்து செயற்படுவது மிகவும் முக்கியமானது என மாநாயக்க தேரர்கள் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

இலங்கைக்கு 400 மில்லியன் ரூபா பெறுமதியான உதவிகளை வழங்க சீனா தீர்மானம்

editor

உத்தியோகபூர்வ அலுவலகம், வாகனத்தை அமைச்சின் செயலரிடம் கையளித்தார் மஹிந்த அமரவீர

editor

உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பில் 168 முறைப்பாடுகள்!

editor