வகைப்படுத்தப்படாத

நாட்டின் பல பிரதேசங்களில் மழை

(UDHAYAM, COLOMBO) – நாட்டின் பல பிரதேசங்களில் பிற்பகல் 2.00 மணியின் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தெற்கு சப்ரகமுவ மேற்கு மற்றும் ஊவா மாகாணங்களில் இடியுடன் கூடிய மழைக்கு அதிக வாய்ப்புள்ளதாக திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

நாட்டின் கடற்பிரதேசங்களை அண்டிய பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். மன்னாரிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக கொழும்பு மற்றும் காலியில் வரையிலான பிரதேசங்களில் மாலை அல்லது இரவு வேளையிலும் ஹம்பாந்தோட்டையிலிருந்து திருகோணமலை ஊடாக மட்டக்களப்பு வரையிலுமான கரையோரபிரதேசங்களில் மழை பெய்யக்கூடும் என்றும் திணைக்களம் அறிவித்துள்ளது.

தென் கிழக்கு பகுதிகளில் காற்று 20 தொடக்கம் 30 கிலோமீற்றர் வேகத்தில் வீசக்கூடும் என்றும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்பதனால் பொதுமக்களை அவதானமாக செயற்படுமாறு திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related posts

மியன்மாரின் புதிய ஜனாதிபதியாக வின் மியின்ட்

More Minuwangoda unrest suspects out on bail

கட்சி, நிறம், பதவி எதுவாக இருந்தாலும் ஊழல்வாதிகளுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும் – பிரதமர்