உள்நாடுகாலநிலை

நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய பலத்த மழை

நாட்டின் பல பகுதிகளில் இன்று மாலை அல்லது இரவு வேளைகளில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் வடமேல் மாகாணங்களில் சில இடங்களில் சுமார் 100 மில்லி மீற்றர் அளவில் பலத்த மழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

தென் மாகாணம், மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் காலை வேளையில் மழை பெய்யக்கூடும்.

இடியுடன் கூடிய மழையுடன் தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னலினால் ஏற்படும் அபாயத்தைக் குறைக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொது மக்களிடம் கோரியுள்ளது.

Related posts

சமூக ஊடகங்களின் பயன்பாடு – சிறுவர்களுக்கு காத்திருக்கும் ஆபத்து

editor

கத்தாரிலுள்ள இலங்கையர்களை நாட்டிற்கு அழைத்துவர நடவடிக்கை

சீரற்ற காலநிலை காரணமாக ரயில் சேவைகள் மட்டு