உள்நாடுகாலநிலை

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் இடியுடன் கூடிய மழை!

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (06) பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் முல்லைத்தீவு மாவட்டத்திலும் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழையுடன் தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கத்தால் ஏற்படும் ஆபத்துகளைக் குறைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.

Related posts

சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனியவுக்கு விளக்கமறியல்

editor

மேலும் 23 இலட்சம் சைனோபாம் தடுப்பூசிகள் நாட்டுக்கு

மகளின் முதலிரவன்று தந்தை கைது! 9வருடத்திற்கு பின் சிக்கினார்