உள்நாடு

நாட்டின் பல பகுதிகளில் 75 மி.மீற்றருக்கும் அதிகளவான மழை வீழ்ச்சி

(UTV | கொழும்பு) –  நாட்டின் சில பகுதிகளில் 75 மில்லி மீற்றருக்கும் அதிகளவான மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இதன்படி, வடக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் சில பகுதிகளிலும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாணத்தின் சில பகுதிகளிலும், மாத்தளை, நுவரெலியா மற்றும் பொலனறுவை ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளிலும் 75 மில்லி மீற்றருக்கும் அதிகளவான மழை வீழ்ச்சி பதிவாகுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், களுத்துறை, காலி, மாத்தறை மற்றும் கண்டி மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

தேசபந்து தென்னகோன் தலைமறைவாக இருக்க உதவிய நபருக்கு பிணை

editor

தேசிய விளையாட்டு சபை நியமனம்

editor

கிழக்கு மாகாண தொல்பொருள் செயலணிக்கு புதிதாக 03 உறுப்பினர்கள் நியமனம்