உள்நாடு

நாட்டின் பல பகுதிகளில் 50 மி.மீற்றர் அளவில் பலத்த மழை

(UTV|கொழும்பு) மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் 50 மில்லிமீற்றர் பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

ஊவா, கிழக்கு, வடக்கு மற்றும் வட மத்திய மாகாணங்களின் சில இடங்களில் மழை பெய்யக்கூடும் எனவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வடக்கு, வட மத்திய மற்றும் வட மேல் மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் மணித்தியாலத்திற்கு 40 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இடியுடன் கூடிய பலத்த மழைபெய்யும்போது தற்காலிகமாக இடைக்கிடையே இடியுடன் கூடிய மழை பெய்யுமெனவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related posts

அனைத்து திரையரங்குகளுக்கும் மறு அறிவித்தல் வரை பூட்டு

பொடி லெசிக்கு மீண்டும் விளக்கமறியல்

மனித உரிமை மீறல் : ஆராய மூவரடங்கிய குழு