சூடான செய்திகள் 1

நாடு முழுவதும் மழையுடன் கூடிய காலநிலை அதிகரிக்கும்

(UTV|COLOMBO)-இலங்கைக்கு அருகில் ஏற்பட்ட கீழ் வளிமண்டல தளம்பல் நிலை காரணமாக நாடு முழுவதும் மழையுடன் கூடிய காலநிலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

வடக்கு, கிழக்கு, மத்திய, சப்ரகமுவ, மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் 150 மி.மீக்கும் அதிகமான மிகப் பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் 100 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

மேல் மற்றும் தென் கரையோரப் பிரதேசங்களில் காலை வேளையில் சிறிதளவான மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

 

 

 

 

Related posts

ஒருதலைப்பட்சமாக பாராளுமன்றத்தை மீண்டும் கூட்டுவதற்கு விரும்பவில்லை – கரு ஜயசூரிய

பிரதமரின் செயலாளர் இன்று ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில்

இரட்டைப் பதிவுகளாக இடம்பெற்றிருந்த 126,481 பெயர்கள் அழிப்பு