சூடான செய்திகள் 1

நாடு கடத்தப்பட்ட மொஹமட் ஜபீர் விசாரணைகளின் பின்னர் விடுதலை…

(UTV|COLOMBO) பிரபல பாதாள உலக குழு தலைவர் மாகந்துர மதூஷுடன் டுபாயில் கைது செய்யப்பட்ட நாடு கடத்தப்பட்ட மொஹமட் முபார் மொஹமட் ஜபீரிடம் குற்றப்புலனாய்வு திணைகள விசாரணைகளின் பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

நேற்று(08) கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு மொஹமட் முபார் மொஹமட் ஜபீருடன் மொஹமட் நசீம் மொஹமட் பைசால் என்பரும் வந்தடைந்த பின்னர் இவர்கள் இருவரையும் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் பொறுப்பேற்றிருந்தனர்.

இருவரிடமும் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் மற்றும் பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்பின் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வந்த நிலையில் மொஹமட் முபார் மொஹமட் ஜபீர் இன்று(09) விடுதலை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

Related posts

“வடிவேல் சுரேஸுக்கு புதிய பதவி வழங்கிய ஜனாதிபதி ரணில்”

ரயன் வென் றுயன் பிணையில் விடுதலை

மருதமுனையில் இ.போ.சபை பஸ்கள் மீது கல்வீச்சுத் தாக்குதல்