வகைப்படுத்தப்படாத

நாடாளுமன்றத்தில் சபாநாயகரின் செயற்பாடுகள் ; மகிந்த அணி அதிருப்தி

(UDHAYAM, COLOMBO) – நாடாளுமன்றத்தில் சபாநாயகரின் செயற்பாடுகள் தொடர்பில் மகிந்த அணி அதிருப்தியை வெளியிடுவதாக, நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று ஏற்பட்ட அமைதியற்ற நிலைமை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியடும் போது அவர் இதனைக் கூறியுள்ளார்.

தேசிய சுதந்திர முன்னணி நாடாளுமன்றத்தில் தனித்தியங்க அனுமதிக்க முடியாது என்று நாடாளுமன்ற சபாநாயகர் அறிவித்ததை அடுத்து அங்கு குழப்ப நிலை உருவானது.

இதனால் மூன்று தடவைகள் நாடாளுமன்ற அமர்வு ஒத்திவைக்கப்பட்டது.

அத்துடன் குழப்பகரமாக செயற்பட்டமைக்காக மகிந்த தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ்குணவர்தனவுக்கு நாடாளுமன்றத்துக்கு பிரவேசிக்க ஒருவார கால தடை விதிக்கப்பட்டது.

இதன்போது சபாநாயகர் செயற்பட்ட விதம் அதிருப்தியளிப்பதாக பந்துலகுணவர்தன கூறியுள்ளார்.

Related posts

பிஜி தீவுகளில் கடும் நிலநடுக்கம்

Premier says he is opposed to capital punishment

பணிப்புறக்கணிப்பால் அஞ்சல் சேவை பாதிப்பு