சூடான செய்திகள் 1

நாடாளுமன்றத்தில் 113 உறுப்பினர்களின் ஆதரவு-ஜனாதிபதி

(UTV|COLOMBO)-பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு தற்போதே நாடாளுமன்றத்தில் 113 உறுப்பினர்களின் ஆதரவு பெற்றுக் கொள்ளப்பட்டு விட்டதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

எந்தவிதமான அழுத்தங்கள் ஏற்பட்டாலும் தாம் மேற்கொண்ட முடிவில் இருந்து பின்வாங்க போவதில்லை என்றும் ஜனாதிபதி இதன்போது அறிவித்தார்.

இதில் உரையாற்றிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, அபிவிருத்தி மற்றும் மக்கள் நலனுக்காக ஜனாதிபதியுடன் இணைந்து ஒன்றாக பயணிப்பதாக தெரிவித்தார்.

அதேநேரம் ஒரு நாட்டின் ஜனாதிபதியாக இருந்து மைத்ரிபால சிறிசேன மேற்கொண்ட தீர்மானத்தை பெரிதுவக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

 

 

Related posts

சாய்ந்தமருது நகர சபை விசேட வர்த்தமானி இரத்து

அரசின் முடிவுகளால் பொருளாதாரத்தில் மீளவும் வீழ்ச்சி

சாய்ந்தமருது உள்ளுராட்சிமன்ற கோரிக்கை தொடர்பில் “சுமூகமான முடிவுக்கு மக்கள் காங்கிரஸ் ஆதரவு”- அமைச்சர் ரிசாத் பதியுதீன்