உள்நாடு

நாடளாவிய ரீதியில் இன்று தொழிற்சங்க நடவடிக்கை

(UTV | கொழும்பு) – சுகயீன விடுமுறையை அறிவிக்கும் வகையில் இன்று (18) நாடளாவிய ரீதியில் தொழிற்சங்க நடவடிக்கையொன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

மின்சார சபைக்கு புதிய பொது முகாமையாளரை நியமிப்பதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பது உட்பட பல விடயங்கள் தொடர்பில் தொழிற்சங்கங்கள் நடவடிக்கை எடுத்து வருவதாக அதன் செயற்குழு உறுப்பினர் சரித ஜயநாத் தெரிவித்துள்ளார்.

மேலும் இன்று இலங்கை மின்சார சபையின் தலைமை அலுவலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டமொன்றை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக சரித ஜயநாத் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதத்தை நடாத்த தீர்மானம்!

கனடாவில் ஆட்சி மாற்றத்தால் இலங்கையில் வலுப்படுத்தப்படும் சட்டங்கள் – பியர் பொலியர்

தேர்தல் திகதி குறித்து மகிந்த தேசப்பிரியவின் முக்கிய அறிவிப்பு