உள்நாடு

நாடளாவிய அனைத்து தேவாலயங்களுக்கும் விசேட பாதுகாப்பு

(UTV | கொழும்பு) – நாளை மறுநாள் (21) நாடு முழுவதும் உள்ள அனைத்து தேவாலயங்களுக்கும் பாதுகாப்பு வழங்குமாறு அனைத்து பொலிஸ் நிலையங்கள் உள்ளிட்ட சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு பொலிஸ் தலைமையகம் அறிவுறுத்தியுள்ளது.

இரண்டு வருடங்களுக்கு முன்னர் ஏப்ரல் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தில் தற்கொலை குண்டுத்தாக்குதலில் கொல்லப்பட்ட மற்றும் காயமடைந்தவர்களின் நினைவாக தேவாலயங்களில் விசேட ஆராதனை நிகழ்வுகள் மற்றும் மத நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள காரணத்தால் இவ்வாறு பாதுகாப்பு வழங்கவுள்ளதாக ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

Related posts

அரச நிறுவனங்களுக்கான சுற்றறிக்கை இன்று வெளியாகும்

ஸ்வர்ணமஹால் : முன்னாள் பணிப்பாளர் உள்ளிட்ட நால்வர் கைது

சுங்க திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கடமைகளை பொறுப்பேற்றார்