அரசியல்உள்நாடு

நரேந்திர மோடியை சந்திக்க இந்தியா செல்லும் ஜனாதிபதி அநுர

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க எதிர்வரும் டிசம்பர் மாதம் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இந்தியா செல்லவுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

பதவிப் பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர் ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே விஜித ஹேரத் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி திசாநாயக்க இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து இருதரப்பு கலந்துரையாடல்களை நடத்தவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts

மின்வெட்டு தொடர்பிலான புதிய அறிவிப்பு

ரணிலுக்கும், அநுரவிற்கும் பதிலடி கொடுத்த சஜித்

editor

குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 712 ஆக அதிகரிப்பு