கேளிக்கை

நயன்தரா பற்றி சர்ச்சை கருத்து – ராதாரவிக்கு நேர்ந்த கதி!!!

(UTV|INDIA) நடிகை நயன்தாரா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதால் நடிகர் ராதாரவிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கொலையுதிர் காலம் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகர் ராதாரவி பேசும்போது, நயன்தாரா பற்றி சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தார்.

இவரது பேச்சுக்கு இயக்குனர் விக்னேஷ் சிவன் உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

அதனையடுத்து அவர் திமுகவில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டார்.

இதற்கான அறிவிப்பை திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் வெளியிட்டார்.

அவர் தனது அறிக்கையில், நடிகர் ராதாரவி கழக கட்டுப்பாட்டை மீறியும் கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வருவதால், திமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் அவர் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுவதாக கூறியிருந்தார்.

இந்நிலையில், நடிகர் ராதாரவிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ‘பெண்ணுரிமை முன்னிறுத்தும் திமுகவில் அங்கம் வகிக்கும் நடிகர் ராதாரவியின் திரைத்துறை சார்ந்த பெண் கலைஞர்கள் குறித்த கருத்து ஏற்க இயலாதது. கடும் கண்டனத்திற்குரியது.

கழகத்தினர் யாவரும் கண்ணியம் குறையாத வகையில் கருத்துகளை தெரிவிக்க வேண்டும். மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’ என குறிப்பிட்டுள்ளார்.

 

 

 

 

Related posts

உலகளவில் இடம் பெற்ற பிரபலங்களின் திருமணங்கள்…

இளைய தளபதியை தொடர்ந்து உலக நாயகன்

நடிகர் சசி கபூர் காலமானார்