கேளிக்கை

நடிகைகளுக்கு ஆயுள் குறைவு : சமந்தா

(UTV|இந்தியா) – இன்னும் இரண்டு, மூன்று வருடங்கள் மட்டும்தான் சினிமாவில் நடிப்பேன் என நடிகை சமந்தா தெரிவித்துள்ளார்.

ஜானு திரைப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த அவர், இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து தெரிவித்த அவர், “சினிமாவில் ஹீரோயின்களுக்கு ஆயுள் குறைவு. இது எல்லோருக்கும் தெரிந்ததுதான். எனக்குத் திருமணமாகிவிட்டது. நானும் என் குடும்பம் பற்றி யோசிக்க வேண்டும். அதனால்தான் 2, 3 வருடத்துக்குப் பின் சினிமாவில் இருந்து விலகிவிட முடிவு செய்துள்ளேன்.

நான் நடித்து அடுத்து வெளிவரும் படங்கள் என்றும் நினைவில் நிற்கும்படி இருக்கும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Related posts

அனிருத்தை நடிக்க அழைக்கும் சிவகார்த்திகேயன்

காதலருடன் எமி ஜாக்சன் நிச்சயதார்த்தம்

உடல் நலம் குறித்து மனம் திறந்து பேசிய சமந்தா