வகைப்படுத்தப்படாத

நச்சுக் காற்றினால் கண்கள், மூக்குகளில் ரத்தக் கசிவு -அதிர்ச்சியில் மக்கள்

(UTV|BANGKOK) தாய்லாந்தின் தலைநகரமான பாங்காக்கில் காற்றில் நச்சு கலந்துள்ளது.  இந்த நச்சுத்தன்மையுடன் கூடிய பனிப்புகை மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதித்துள்ளது. நெரிசலான வாகன போக்குவரத்தும், நகரத்திற்கு வெளியே பொருட்களை எரிப்பதும், தொழிற்சாலைகளில் இருந்து வரும் புகைகளுமே இந்த நச்சுத்தன்மைக்கு காரணமாக கூறப்படுகிறது.  இந்த அபாயகரமான நச்சு துகள்கள் பிஎம் 2.5 எனும் அளவை கடந்து, தாய்லாந்தை சுற்றியுள்ள 41 பகுதிகளில் நச்சுக்காற்றாக வீசி வருகிறது என அந்நாட்டின் காற்று மாசுகட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.

மேலும் அப்பகுதியில் பாதிப்புக்குள்ளான மக்கள், தங்கள் மூக்குகளில் இருந்து ரத்தம் கசிவதையும், இருமலின் போது ரத்தம் வருவதையும், கண்களின் கருவிழிகளில் ரத்தம் உறைந்து இருப்பதையும் புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர். இந்த பதிவுகளை வெளியிட்டு, தங்கள் உடல்நலனை பாதுகாக்கும் படியும், இதுபோன்று அறிகுறிகள் இருந்தால் உடனடியாக சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளனர்.  இதனால் மக்கள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகினர்.

இதனையடுத்து அடுத்த சில வாரங்களுக்கு பள்ளிகள் மூடவும், டீசல் மூலம் இயங்கும் வாகனங்களுக்கு தடை விதிக்கக் கோரியும் நாடு முழுவதும் ஆலைகளை ஆய்வு செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. தாய்லாந்து அரசின் சமீபத்திய நடவடிக்கைகளுக்கு பின்னரும் காற்றில் எந்த மாறுபாடும் இல்லாமல் நச்சுத்தன்மையின் வீரியம் அதிகரித்து வருகிறது. மேலும்  ஏர்விஷ்வல்ஸ் நிறுவனம் கடந்த வாரம் நடத்திய ஆய்வில், உலக அளவில் காற்று மாசுபாடு நிறைந்த நாடுகளில் பாங்காக் 5-வது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

Related posts

Bread price goes back down

இந்தோனேசியா சர்வேச விமான நிலையத்தில் ஜனாதிபதிக்கு அமோக வரவேற்பு

ஜப்பான் பிரதமரை சந்தித்தார் ஜனாதிபதி