உள்நாடு

நசுங்கும் இலங்கை : வேலைவாய்ப்புக்களை இழக்கும் நிலை

(UTV | கொழும்பு) – தற்போதைய பொருளாதார நெருக்கடி காரணமாக எதிர்காலத்தில் பலர் தொழில் வாய்ப்புக்களை இழக்க வேண்டியேற்படும் என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.

எதிர்வரும் 6 மாதக் காலப்பகுதிக்குள் பணவீக்கத்தை எவராலும் 30 சதவீதத்திற்கு கீழ் கொண்டுவர முடியாது.

அரசாங்கம் சலுகை வழங்காத விடத்து சிறிய மற்றும் நடுத்தர கைத்தொழில்களை நம்பியுள்ளவர்களின் வாழ்வாதாரத்தை கொண்டு செல்வதற்கு முடியாது போகும்.

இதனால் பலர் தமது தொழில் வாய்ப்புக்களை இழக்க வேண்டியேற்படும் என மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க குறிப்பிட்டுள்ளார்.

Related posts

இதுவரை 19,091 வழக்குகள் நிறைவு

ஊவா மாகாணத்தின் பிரதம செயலாளராக எம். எல் கம்மம்பில நியமனம்

editor

ரஷ்யாவின் முக்கிய பிரதானி இலங்கை வருகை