உள்நாடுபிராந்தியம்

தோட்ட இளைஞர்களின் சொந்த முயற்சியால் இரண்டு தொங்கு பாலங்கள் திறந்து வைப்பு

பொகவந்தலாவ கெர்க்கஷ்வோல்ட் எல்பட கீழ்பிரிவு மற்றும் மேல்பிரிவு ஆகிய தோட்டப் பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் நாளாந்தம் போக்குவரத்திற்கு பயன்படுத்தும் கேசல்கமுவ ஒயாவை ஊடறுத்து செல்லும் இரண்டு தொங்கு பாலங்கள் இன்று (27) திறந்து வைக்கப்பட்டன.

எல்பட தோட்ட இளைஞர்களின் சொந்த முயற்சியில் குறித்த பாலங்கள் புனரமைக்கப்பட்டுள்ளன.

நிகழ்வில் கெர்க்கஷ்வோல்ட் தோட்ட உதவி முகாமையாளர்களான டி.எம். ஆர்.எஷ். மதுவந்த திஷாநாயக்க, பி.எம்.ஏ.ஆக்கேஷ் சரமசிங்க, தோட்ட இளைஞர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டுள்ளனர்.

Related posts

உடல் தாயாரிடம்; கணவன் தற்கொலை முயற்சி

கபில சந்திரசேன மற்றும் அவரது மனைவி பிணையில் விடுதலை

இனி அரிசி இறக்குமதி செய்யப்படாது – பிரதி அமைச்சர் ஜயவர்தன

editor