உள்நாடு

தொழில்நுட்பக் கோளாறு – பயணித்துக் கொண்டிருந்த ரயில் இயந்திரத்தில் தீ விபத்து

பெலியத்தவில் இருந்து கண்டி நோக்கி பயணித்துக் கொண்டிருந்த கடுகதி ரயிலின் இயந்திரத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் இன்று மாலை (20) எந்தேரமுல்ல ரயில் நிலையத்திற்கு அருகில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ரயில் இயந்திரம் தீப்பிடித்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதனால், பிரதான பாதையில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

Related posts

வெள்ளவத்தையில் மாடியில் இருந்து விழுந்த பெண் பலி

ஊழலை ஒழிப்பது அரசின் முக்கிய பொறுப்பு

மேலும் 37 பேர் பூரண குணம்