கேளிக்கை

தொழிலதிபரான அஜித்கை பட நடிகை

(UTV|இந்தியா) – அஜித் நடிப்பில் கடந்தாண்டு வெளியான நேர்கொண்ட பார்வை படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த நடிகை ஒருவர், தொழிலதிபராக அவதாரம் எடுத்துள்ளார்.

இவன் தந்திரன் படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானவர் ஸ்ரத்தா ஸ்ரீநாத். பின்னர் மாதவன், விஜய் சேதுபதியின் விக்ரம் வேதா, அஜித்குமாரின் நேர்கொண்ட பார்வை ஆகிய படங்களில் நடித்து பிரபலமானார். மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி திரையுலகிலும் ஸ்ரத்தா பரபரப்பாக இயங்கிவருகிறார். அடுத்ததாக விஷாலுக்கு ஜோடியாக சக்ரா படத்தில் நடித்து வருகிறார்.

தற்போது தொழில் அதிபராக அவதாரம் எடுத்துள்ள ஸ்ரத்தா ஸ்ரீநாத், சென்னை வேளச்சேரியில் உள்ள மாலில் ஓட்டல் ஒன்றை திறந்துள்ளார். இதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ள அவர் “எனது ஓட்டல் சிறியதாக இருந்தாலும் கண்டிப்பாக நல்ல உணவு இங்கே கிடைக்கும்” என்று கூறியுள்ளார். அவருக்கு திரையுலகினர் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்

Related posts

ஐஸ்வர்யாராய் – அபிஷேக் பச்சன் இடையே மோதலா?

அனிருத் வீட்டில் மருமகளாகும் மஞ்சிமா?

பிரபல நடிகையின் உடையை பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள்! விலை எவ்வளவு தெரியுமா