உள்நாடுபிராந்தியம்

தொழிற்சங்க நடவடிக்கையினால் தபால் நிலையங்கள் பூட்டு!

தபால் தொலைத்தொடர்பு அதிகாரிகள் சங்கம் மற்றும் ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணியினர் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

குறித்த ஊழியர்கள் தமது சேவையில் இருந்து விலகி பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்கவுள்ளதாக ஏற்கனவே அறிவித்திருந்தனர்.

தபால் ஊழியர்களின் மேலதிக கொடுப்பனவு, நிர்வாக அலுவலகம் மற்றும் கணக்காய்வு அலுவலகங்களில் ஊழியர்களின் பணியை ஆரம்பிக்கும் நேரம் மற்றும் வெளியேறும் நேரம் என்பவற்றை கைவிரல் அடையாள இயந்திரங்களில் பதிய வேண்டும் என்ற அறிவுறுத்தல்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்தல் உள்ளிட்ட 19 கோரிக்கைகளை முன்வைத்து தபால் ஊழியர்கள் இவ்வாறு பணிப்புறக்கணிப்பை முன்னெடுத்துள்ளனர்.l

அந்த வகையில், தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக நுவரெலியா மாவட்டத்தில் உள்ள பிரதான தபால் நிலையங்கள் மற்றும் கிளை தபால் நிலையங்கள் (17) மாலை முதல் மூடப்பட்டதை காணக்கூடியதாக உள்ளது.

-க.கிஷாந்தன்

Related posts

அனுமதிப் பத்திரத்திற்கு முரணான வகையில் மணல் ஏற்றிய குற்றச்சாட்டில் ஜந்து டிப்பர்களும், அதன் சாரதிகளும் பொலிசாரால் கைது

சமன் பெரேராவுக்கு விளக்கமறியல்

சஜித் பிரதமர் பதவியை ஏற்கத் தயாராக இருந்தால் ஆதரவளிக்க நாம் தயார்