உள்நாடு

தொழிற்சங்க நடவடிக்கை மாற்று வழியில் முன்னெடுக்கப்படும்

(UTV | கொழும்பு) – நாளைய தினம் பாடசாலைகளுக்குச் சென்றாலும் தங்களது தொழிற்சங்க நடவடிக்கை மாற்று வழியில் முன்னெடுக்கப்படும் என ஆசிரியர் – அதிபர் தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.

பாடசாலைகளில் ஆசிரியர் – அதிபர் தொழிற்சங்கங்கள் நாளை (25) முதல் செயற்படவுள்ள முறைமைகள் அடங்கிய கடிதம் ஒன்று நேற்றைய தினம் கல்வி அமைச்சின் செயலாளருக்கு அனுப்பப்பட்டது.

அதற்கமைய, சேவை தினங்களில் காலை 7.30 முதல் பிற்பகல் 1.30 வரையில் மாத்திரமே கற்பித்தல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

   

Related posts

ரணிலின் வெற்றியின் பங்காளியாக நாமும் கெத்தாக நிற்கவேண்டும் – அமைச்சர் ஜீவன் தொண்டமான்

editor

ரணிலுக்கு ஆதரவு வழங்கிய குழு யானை ? சிலிண்டர் ?

editor

மஹர சிறைச்சாலை மோதல் – உயிரிழந்த 9 கைதிகளுக்கு கொரோனா உறுதி